முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவை காய்ச்சல் பீதி: சீனாவில் கோழிச் சந்தைகள் மூடல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஏப். 8 - இதுவரை சீனாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். இதை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும் எச் 7என் 9 என்ற இந்த வைரசின் தாக்கத்திற்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தின. சீனாவின் ஹுஹாய் சந்தையில் விற்கப்பட இருந்த ஒரு புறாவிடம் இந்த வைரஸ் கிருமிகள் இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 20,000 பறவைகள் கொல்லப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து சாங்காய் நகரில் உள்ள அனைத்து கோழிச் சந்தைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. இச்செய்தி பரவியதைத் தொடர்ந்து ஐரோப்பா, ஹாங்காங் பங்கு மார்க்கெட்டில் விமானக் நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கின. இந்த வைரஸ் தொற்றானது மனித தொடர்பால் ஏற்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்