வாஷிங்டன், ஏப்.9 - அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிடுவார் என கிளிண்டன் சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக 1993 முதல் 2001ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பில் கிளிண்டன் . இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் , ஒபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக நான்கு ஆண்டு பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியாகிய போது, அதை ஹிலாரி கிளிண்டன் உறுதியாக மறுத்தார். இந்நிலையில், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என அவரது கணவரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன் கூறியுள்ளார்.