முக்கிய செய்திகள்

தீவிரவாதம்-கடல் கொள்ளையை அடியோடு ஒழிக்க இந்தியா உறுதி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      இந்தியா
pti6

 

போர்ட் லூயிஸ்,ஏப்.27 - உலகத்தில் தீவிரவாதத்தையும் கடல் கொள்ளையையும் அடியோடு ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். 

இந்துமகா சமுத்திர நாடுகளில் ஒன்றான மொரிஷீயஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், தலைநகர் போர்ட்லூயிஸில் உள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் உலக அளவில் தீவிரவாதத்தையும் கடல் கொள்ளையையும் சர்வதேச ஒத்துழைப்புடன் அடியோடு ஒழித்துக்கட்ட இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றார். இந்துமகா சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவும் மொரிஷீயஸ் நாடும் சேர்ந்து முக்கியப்பங்கு ஆற்ற முடியும். இந்த கடலின் பெரும்பகுதி இருநாட்டுக்கும் சொந்தமாகும் என்றார். இந்திாவிற்கு மொரிஷீயஸ் நாடு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. உலக அளவில் பரவி இருக்கும் தீவிரவாதமும் கடல் கொள்ளையும் எதிர்த்து நம் இரு நாடுகளும் போரிட உறுதிபூண்டு செயலாற்றி வருகின்றன. இது பாராட்டுக்குரியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க மொரிஷீயஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு இந்தியா சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதீபா பாட்டீல் மேலும் கூறினார். மொரீஷியஷ் நாட்டிற்கு பிரதீபா பாட்டீல் 5 நாள் பயணமாக சென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: