முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமதி தமிழ் படத்துக்கு வரிவிலக்கு: தேவயானி பேட்டி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.11 - திருமதி தமிழ் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருப்பது பெருமையாக இருக்கிறது என்று நடிகை தேவயானி நேற்று நிருபர்களிடம் கூறினார்.  இது குறித்த விபரம் வருமாறு:- இராதே பிலிம்ஸ் சார்பில் ராஜகுமாரன் - தேவயானி தயாரித்துள்ள படம் திருமதி தமிழ் இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கீர்த்தி சாவ்யா, ராதாரவி, ரமேஷ்கண்ணா, கஞ்சா கருப்பு என பலர் நடித்துள்ளனர். படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ராம்சிங். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் படம் பற்றி நடிகை தேவயானி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமதி தமிழ் என்னுடைய 75-வது படம் எனது கணவர் ராஜகுமாரன் இயக்கியிருப்பதோடு பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் பெண்களை முன்னிறுத்தி வந்திருக்கும் படம் இது. முன்னணி நட்சத்திரங்கள் 25 பேர் நடித்திருக்கிறார்கள் ராஜகுமாரன் இயக்கியிருக்கும் எல்லா படங்களிலும் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். சும்மா அப்படி இப்படி என்று முழு கமர்ஷியல் சிந்தனையோடு படம் இயக்காமல் சமுதாயத்துக்கு தேவையான ஒரு கருத்துடன் படம் இயக்குவார். அப்படித் தான் நீ வருவாயா படத்தில் கண் தானம் கருத்தை மையப்படுத்திருந்தார். காதலுடன் படத்தில் வரதட்சனை கருத்தை மையப்படுத்தியிருந்தார்.இப்படி அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு சோஷியல் விஷயம் இருக்கும்.

அந்த வகையில் இந்த படத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. இன்றை காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றம் அபாரமாக உள்ளது. அதற்கேற்றவாறு இந்த படம் அவர்கள் பக்கம் பேசுகிறது. படத்திற்கு இன்னொரு சிறப்பு பாடல்கள் அமைந்திருப்பது. அருப்புக்கோட்டை தவமணி, மொரப்பூர் ஓவியன், அந்தியூர் நித்யா ஆகியோர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி உள்ளனர். குறிப்பாக தமிழ் தமிழ், திருக்குறள் போன்ற பாடல்கள் தேசிய கீதம் போல பாதுகாத்து கேட்க வேண்டிய பாடல்கள். இதை தனியாரிடம் விற்றால் அனைத்து மக்களிடமும் போய் சேராது என்பதால் என் மகள் பெயரில் ஆடியோ நிறுவனம் தொடங்கி 25, ஆயிரம் சி டி போட்டு தமிழகம் முழுக்க சென்று இலவசமாக கொடுத்துயிருக்கிறோம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இதுவரை எவ்வளவோ படங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது தான் தமிழில் ஒரு அழகான குடும்பாங்கான படம் பார்த்திருக்கிறோம் என்று பாராட்டி `யூ' சான்று அளித்து வரிவிலக்கு கொடுத்துள்ளனர். இது ஒன்றே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. தமிழக அரசுக்கு இராதே, பிலிம்ஸ் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 300 பிரிண்ட் போட்டு எங்கள் நிறுவனமே தமிழகம் முழுக்க இம்மாதம் திரையிடுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ராஜகுமாரன், எஸ்.ஏ.ராஜ்குமார், கீர்த்திசாவ்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago