முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை ஒழிக்க பாக். ஒத்துழைப்பு கொடுக்கிறதா?

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஏப்.27 - தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கொடுத்து வரும் ஒத்துழைப்பு குறித்து அதிபர் ஒபாமா நேற்று ஆய்வு செய்தார். தீவிரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம் மீது விமானத்தை மோதவிட்டு அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்கினர். இதில் ஆயிரக்கணக்கான அறிவு ஜீவிகள் பலியானார்கள். இதனையடுத்து அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தையும் அதன் தலைவர் பின்லேடனையும் ஒழித்துக்கட்ட அமெரிக்கா தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தும் பின்லேடனை ஒழிக்க முடியவில்லை. மேலும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியபோது பின்லேடனும் அவனது ஆதரவாளர்களும் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துக்கொண்டியிருந்ததாக விக்கி லீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. அல்கொய்தா மற்றும் இதர தீவிரவாத அமைப்புகளே சேர்ந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாக உலாவிக்கொண்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உண்மையிலேயே ஒத்துழைப்பு கொடுக்கிறதா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது. 

இந்தநிலையில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவுக்கு பாகிஸ்தான் கொடுத்து வரும் ஆதரவு குறித்து அதிபர் ஒபாமா நேற்று அந்த குழு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது பாகிஸ்தான் ஒத்துழைப்பு குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் ஒபாமா பெற்றுக்கொண்டார். இதைத்தவிர பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஒபாமா ஆய்வு செய்து வருகிறார் என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்