முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் கல்வித் துறையில் சீர்திருத்தம் தேவை: ஜனாதிபதி

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

குருஷேத்திரம், ஏப். 11 - நாட்டின் உயர் கல்வித் துறையில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, 

நம்முடைய பல்கலைக் கழகங்கள் உயர் கல்வித் துறையில் பல சவால்களை எதிர்கொண்டு வந்தாலும் அவற்றின் தரம் கவலையளிப்பதாக உள்ளது. நாட்டில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடைமுறையில் உள்ள செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களுடைய ஆசிரியர்களின் திறமைகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை சர்வதேச அளவில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்க செய்ய வேண்டும். குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாடு வாழ் வல்லுனர்களையும் இந்திய வம்சாவளியினரையும் நம்முடை நாட்டுக்கு வரவழைத்து அவர்களை கொண்டு சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் இரு தரப்பிலும் உள்ள அறிவுசார் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

நம்முடைய நாட்டின் அடிப்படை வரலாறு தெரியாமல் எந்த துறையிலும் சாதித்து விட முடியாது. மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் மீது தங்களது பார்வையை திரும்ப தொடங்கியுள்ள சூழ்நிலையில் நாம் அவற்றை புறக்கணித்து விட கூடாது. இதிகாசங்களில் சொல்லப்பட்ட போதனைகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். அந்த போதனைகள் நம்மை பண்படுத்தி முறையான வாழ்க்கையை மேற்கொள்ள உதவும். அவற்றை முறையாக பின்பற்றினால் நவீன உலகத்தில் எத்தகைய சவால்களையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago