முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப்ரல்.12 - டெல்லியில் நடந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். எப்போதும் நடைபெற்றிராத இச்சம்பவக்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் மிகக் கேவலமாக, மோசமாக உள்ளது.  1980-ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம்

இதற்கு முன்னர்  எப்போதும் நடக்காத சம்பவம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக நான் சொல்ல வார்த்தை எதுவும் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகம் முன்பு நடந்த இந்த சம்பவம் எனக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. திட்டக் கமிஷன் ஒரு அரசியலமைப்பு அங்கமாகும். டெல்லி பாதுகாப்பன இடமல்ல. 

மேற்கு வங்காளத்துக்கு தேவையான வருடாந்திர நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக திட்டக் கமிஷன் எங்களை டில்லிக்கு வருமாறு அழைத்தது. அவர்கள் அழைத்ததால் தான் நானும், மேற்ரு வங்காள  மாநில நிதி அமைச்சருமான மித்ராவும் டெல்லிக்குச் சென்றோம். ஆனால் அங்கு நடந்க சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது. எங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டதும், பத்திரிகைகளும், பொது மக்களும் எங்கள்மீது கவலைப்பட்டனர். இதற்கா நான் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.           

  திட்டக் கமிஷன் எங்களை டில்லிக்கு வருமாறு அழைத்ததன்பேரில்தான் நானும், எங்கள் மாநில நிதி அமைச்சர் அமித் மித்ராவும் டெலிக்கு சென்றோம். ஆனால் அங்கு எங்களை தாக்க முயற்சி நடைபெற்றது. இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் மம்தா கூறினார்.

மம்தா பானர்ஜியும், நிதி அமைச்சர் அமித் மித்ராவும் திட்டக் கமிஷன்  அலுவலகத்துக்கு செல்வதற்காக டெல்லி வந்தனர். அவர்கள் இருவரும் டெல்லி வந்து, திட்டக் கமிஷன் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது அவர்களை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். மம்தாவை தாக்க முயற்சி நடைபெற்றது. அவரை போலீஸார் வளையம்போல் நின்று பாதுகாப்பாக திட்டக் கமிஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.இந்த களேபரத்தில் அமித் மித்ராவை ஒரு பெண் இரு தடவை கையால் குத்தினார். இதில் அவரது சட்டை கிழிந்தது. 

கொல்கத்தாவில், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்  தலைவர் ஒருவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவர் விபத்தில் இறந்ததாக மம்தா தெரிவித்தார். இதையடுத்து அங்கு மாணவர் அமைப்பைச் சேர்நதவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக டெல்லி வந்த மம்தாவையும், அவருடன் வந்த நிதி அமைச்சரையும் மாணவர் சங்கத்தினர் தாக்க முற்பட்டனர். இதையடுத்து பிரதமரையும், மத்திய  நிதி அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்துப் பேசுவதை ரத்து செய்துவிட்டு அவர் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்