பாக்.கில் அவாமி இயக்க தலைவர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபா,ஏப்.12 - பாகிஸ்தானில் முத்தாஹிதா அவாமி இயக்க தலைவரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான வசாய் ஜலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் வரும் மே மாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தெற்கு சிந்து மாகாண சட்டசபைக்கும் தேசிய சட்டசபைக்கும் போட்டியிடுகிறார். இவர் நேற்று அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பியோடிவிட்டனர். இந்த படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. தேர்தலில் ஜலில் போட்டியிட விரும்பாத தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள்தான் இவரை சுட்டுக்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கடந்த 1990-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜலில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர். வரும் பொதுத்தேர்திலில் ஜலில் போட்டியிடுவதை தீவிரவாத இயக்கங்கள் விரும்பவில்லை. அவருக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் ஜலில் அதை பொருட்படுத்தாமல் தேர்தலில் போட்டியிட்டதோடு பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மேலும் பல அரசியல் கட்சிகளுக்கு தெக்ஹிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: