முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்: பிரகாஷ்ராஜ் ஆவேசம்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - என் படம் வெளி வரும்போது எங்கிருந்து மிரட்டல் வந்தாலும் யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். இது பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன் சார்பில் உருவாகி இருக்கும் படம் கெளரவம். இந்த படத்தை ராதா மோகன் இயக்கி உள்ளார். நான், சிரஞ்சிவி மகன் சிரிஷ், நடிகை யாமி கெளதம், குமாரவேல், நாசர் என பலர் நடித்திருக்கிறார்கள். வசனம் விஜி எழுதியிருக்கிறார். பெண் ஒளிப்பதிவாளர் ப்ரீதா கேமரா பணியை செய்திருக்கிறார். படத்தொகுப்பு ஆலன் ஐ.ஜே இசை தமன் பாடல்கள் கார்க்கி எழுதியுள்ளார். படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. வேந்தர் மூவிஸ் சார்பாக மதன் வெளியிடுகிறார்.

இந்த படம் சமூக பிரச்சினைகளை சார்ந்து தயாராகி உள்ளது. சாதி கலவரங்கள், கெளரவக் கொலைகள் போன்ற சம்பவங்கள் சமுதாயத்தில் அதிகம் நிகழ்ந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டுகிறேன். மற்றபடி தர்மபுரி சம்பவம் இப்படத்தில் இல்லை. கோவை பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தவில்லை. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே படத்தை வெளியிட மாட்டோம். எங்களிடம் படத்தை போட்டுகாட்ட வேண்டும் என்று சிலர் கேட்டதாக நீங்கள் கேட்கிறீர்கள். அப்படி யாரும் என்னிடம் கேட்கவில்லை. கேட்டாலும் அவர்களிடம் என் படத்தை போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் காணும் சம்பவங்களை படம் பிடிப்பது ஒரு படைப்பாளியின் கடமை, படைப்பு சுதந்திரம். இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. என் படம் வெளிவரும்போது எங்கிருந்து மிரட்டல் வந்தாலும் அதை சந்திப்பேன். யாருடைய மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் உருவாகி உள்ளது. 

இயக்குனர் ராதா மோகன் மிகவும் சமூக அக்கறையோடு படத்தை உருவாக்கியிருக்கிறார். இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களை முன்னிலைப்படுத்தி கெளரவம் உருவாகி இருக்கிறது. முன்பு இருந்ததை விட இப்போது இளைஞர்கள் எழுச்சிப்பெற்று இருக்கிறார்கள். சமூகத்தில் அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த சந்திப்பின் போது இயக்குனர் ராதா மோகன், நடிகர் சிரிஷ், இசையமைப்பாளர் தமன் மற்றும் பட யூனிட்டை சேர்ந்தவர்கள் பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago