முக்கிய செய்திகள்

தமிழர்கள் கொல்லப்பட்டது போர்க் குற்றம்தான் - ஐ.நா. குழு

UN-logo

 

ஐ.நா., ஏப்.27 - இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது அப்பாவி தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது போர்க் குற்றத்தின்கீழ் வரும் என்று ஐ.நா. குழு கூறியுள்ளது.கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த படுகொலை ஒரு போர்க்குற்றம் என்றும், அதனால் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஐ.நா. குழுவை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. 

இந்தநிலையில் இலங்கையில் உள்நாட்டு போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது போர்க் குற்றத்தின்கீழ் வராது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த படுகொலை போர்க் குற்றத்தின்கீழ் வரும் என்று ஐ.நா.குழு ஒன்று நேற்று நியூயார்க்கில் அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஐ.நா. குழுவை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கும் சம்மதிக்கவில்லை என்றால் ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவோடு சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் நடந்த படுகொலைகள் சர்வதேச மனித உரிமை சட்ட மீறலாகும் என்றும் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு சொன்னதாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சர்வதேச விசாரணைக் குழு ஐ.நா. பாதுகாப்பு சபை மூலமாக நடக்குமா? அல்லது ஐ.நா. பொதுச் சபை மூலமாக நடக்குமா? அல்லது சர்வதேச மனித உரிமை கவுன்சில் மூலமாக நடக்குமா என்பது குறித்த தகவல் எதுவும் அந்த அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: