முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைட்லர் விவகாரம்: சட்டம் கடமையை செய்யும்: மொய்லி

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.12 - காங்கிரஸ் கட்சி யாரையும் பாதுகாக்காது. ஜெகதீஷ் டைட்லர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரது பாதுகாவலர்களால் கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனையொட்டி டெல்லியில் சீக்கியர்களுக்கெதிராக கலவரம் மூண்டது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் தனியா நின்றிருந்த 3 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் அருகில் இருந்ததாகவும் அதனால் இந்த 3 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்டதற்கு டைட்லர் காரணமாக இருக்கலாம் என்றும் கூறி அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெகதீஷ் டைட்டலர் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று சி.பி.ஐ.தரப்பில் கூறப்பட்டது. இதனையொட்டி வழக்கு முடிக்கப்பட்டது. இந்தநிலையில் ஜெகதீஷ் டைட்லர் மீது தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜெகதீஷ் டைட்லருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நேற்று பெங்களூர் வந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில் யாரையும் காங்கிரஸ் காப்பாற்றாது. ஜெகதீஷ் டைட்லர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நோக்கிதான் எங்கள் இருதயங்கள் செல்கிறது. யாரையும் காப்பாற்றவதற்காக நாங்கள் இங்கு இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். ஆனால் இந்த விஷயத்தில் கடந்த 1985-86-ம் ஆண்டிற்கு முன்பே காங்கிரஸ் தார்மீக பொறுப்பு ஏற்றது. குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டைக்காட்டிலும் டைட்லர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு பெரியது அல்ல. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் தாம் தூய்மையானவர் என்பதை நிரூபிக்க மோடி ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்றும் மொய்லி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago