முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதி புல்லர் கருணை மனு: சுப்ரீம் கோர்ட்டு நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.13 தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற காலிஸ்தான் விடுதலை படையை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லர் கருணை மனுவை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்துவிட்டது. டெல்லியில் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். பிட்டா உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலை படையை சேர்ந்த தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லர் என்பவருக்கு டெல்லி ஐகோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து புல்லர் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவை சுப்ரீம்கோர்ட்டும் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி தள்ளுபடி செய்ததோடு டெல்லி ஐகோர்ட்டு விதித்த மரண தண்டனையை உறுதி செய்தது. இதனையொட்டி புல்லர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் அவன் 8 ஆண்டு காலம் வரை அவன் தூக்கிலிடப்படவில்லை. இதனையொட்டி தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதில் 8 ஆண்டு காலம் தாமதமாகிவிட்டது என்றும் அதனால் தமக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் புல்லர் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் எனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையையும் நிறைவேற்றாமல் 8 ஆண்டு காலமாகிறது. இந்த 8 ஆண்டுகளில் தாம் மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த கடந்தாண்டு ஏப்ரல் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதமானதையும் மனரீதியாக பாதிக்கப்பட்டதையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது. அதனால் புல்லர் மனுவை நிராகரிக்கிறோம் என்று நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, நீதிபதி முகோபாதயா ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு நேற்று காலை சுமார் 11.15 மணி அளவில் அளிக்கப்பட்டது. அப்போது கோர்ட்டில் புல்லரின் கனடா நாட்டு மனைவி நவ்நீத் கவுரும் இருந்தார். தீர்ப்பை கேட்டதும் அவர் கவலையுடன் இருந்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் கோர்ட்டை விட்டு வெளியே சென்றார். இந்த தீர்ப்பால் ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத்தண்டனை பெற்றுள்ள கொலையாளிகள் உள்பட 17 பேர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago