பிளாக் லிஸ்ட்டில் புதின்: மன்னிப்பு கோரியது பின்லாந்து

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஏப். 14 - ரஷ்யாவின் அதிபர் விளாடிமீர் புதினை கிரிமினல் நடவடிக்கைகளில் தொடர்புடையவராக குறிப்பிட்டி பிளாக் லிஸ்ட்டில் பட்டியலிட்டதற்காக பின்லாந்து மன்னிப்பு கோரியுள்ளது. பின்லாந்து நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் பிளாக் லிஸ்ட்டில் ரஷிய அதிபர் புதினின் பெயரும் இடம் பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதட்டமான சூழல் உருவானது. இதைத் தவிர்க்கும் வகையில் பின்லாந்து, புதினின் பெயரை நீக்கியதுடன் ரஷ்ய அதிபரிடமும் மன்னிப்பு கோரியது.

பின்லாந்தின் அமைச்சர் பைவி ரசனேன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்ய அதிபர் புதினின் பெயர் தவறுதலாக இடம் பெற்று விட்டது. இதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் புதினின் பெயர் எப்படி பிளாக் லிஸ்ட்டில் இடம்பெற்றது என்பது தொடர்பாக பின்லாந்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: