முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு: முதல்வர் சார்பில் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.15 - தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.சீனிவாஸ் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் செய்தித்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து விபரம் வருமாறு:-

தமிழ்திரை உலகில் பழம்பெரும் பின்னணி பாடகரான பி.பி.ஸ்ரீனிவாஸ் நேற்று மதியம் மரணமடைந்தார். தமிழ் புத்தாண்டான நேற்று மதியன் 1 மணிக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் சொகத்திலும் ஆழ்ந்தனர். மறைந்த பின்னணி பி.பி.ஸ்ரீவாஸ் வீடு சென்னை தி.நகரில் உள்ள சி.ஐ.டி. காலணியில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி வீட்டு அருகே உள்ளது.

இவருக்கு ஜானகி  (79)  என்ற மனைவியும், ராஜசேகர், விஜி, பணிக்கர் உள்பட நான்கு  மகண்களும் , லதா என்ற  மகளும் உள்ளனர். 3 மகன்கள் ஹைதாராபத்திலும், மற்றொரு மகன் திருப்பதியிலும் உள்ளார்கள்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆந்திர மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் இவர் தெலுங்கு பிராமணன் வகுப்பபை சேர்ந்தவர். பி.பி.ஸ்ரீனிவாஸ் ஜாதகம் என்ற திரைப்படத்தில்  முதல் பாடலை  பாடினார். அப்போது அவருக்கு வயது 20 இப்பபாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்பட மூன்று மொழிகளில் வெளியானது. காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, மயக்கமா கலக்கமா,  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.  ஆகிய பாடல்கள் இவர் பாடிய நீங்கா புகழ் பெற்ற  பாடல்களாகும்,.

தென்னிந்திய மொழிகளில் 20 ஆயிரத்துக்கு அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார் . பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், சீர்காழி சவுந்தராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா, எஸ்.ஜானகி உள்ளிட்ட பின்னணி பாடகர்களுடனும்,  லதா மங்கேஷ்கர் போன்ற பிரபல இந்தி இணைந்து பாடியுள்ளார். அவர் தமிழக அரசின் கலைமாமணி உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம் அரசுகளின் விருதுகள் உட்பட நூற்றுக்கணக்கான விருதுகளை பாராட்டுக்களையும் பெற்றவர். 

முதல்வர் ஜெயலலிதா அவருக்கு தமிழ்நாடு இயலிசை நாடகமன்ற தலைவராக பொறுப்பு அளித்து மரியாதை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் -தெலுங்கு  மலையாளம் இந்தி கன்னடம்  உள்படம் பல மொழிகளில் இவர் 20,000க்கும் அதிகமான பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெறற்றவர் பி.பி.ஸ்ரீவாஸ் ஆவார்.  மறைந்த பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீவாஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியத்திலிருந்து அவரது உடலுக்கு ஆயிரக்கணகான ரசிகர்களும் திரையுலகத்தினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

அவரது மறைவு அறிந்ததும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் செய்தித்துறை மற்றும் மக்கள் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தமிழ்நாடு இயலிசை நாடகமன்ற தலைவர் தேவா மற்றும் கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் எஸ்.கணேஷ் உள்ளிட்ட பரபலங்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவர் கடைசியாக இயக்குனர் செல்வராவன் ஆயிரத்தில் ஓருவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் இன்று மதியம் 3. மணிக்கு அவர்களது குல வழக்கப்படி தி.நகர் கன்னம்மாபேட்டையில் உள்ள கூடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. அரவது இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினரும் திரையுலகினரும் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!