முக்கிய செய்திகள்

நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Jaya3 8

 

சென்னை, ஏப்.27 - தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியம், குப்பனாபுரம் ஊராட்சி செயலாளர் ஓ.கே.முத்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

முத்து படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் முத்துவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும், தஞ்சாவூர் தெற்கு மாவ்டடம், ஒரத்தநாடு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எஸ்.ஷேக் தாவூத் சாலை விபத்தில் அகால  மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எம்.மகாராஜன் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், கடலூர் மேற்கு மாவட்டம், கெங்கைகொண்டான் பேரூராட்சி 14-வது வார்டு செயலாளர் சு.நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர்கள் ஷேக் தாவூத், மகாராஜன் மற்றும் நாகராஜன் ஆகியோரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்: