முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புறநகரில் சாலை மேம்பாடு பணிகள்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - சென்னை நகருடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் ரூ.290 கோடி செலவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்..

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.300 கோடி செலவில் மின்சாரத்தை சேமிக்கும் தெருவிளக்குகள் பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சரப்பட்டு, கதிர்வேடு, நொளம்பூர் மற்றும் முகலிவாக்கம் ஆகிய 4 பகுதிகளில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  இதன் மூலம் இப்பகுதிகளில் வசிக்கும் 80,000 மக்கள் பயன் அடைவர்.

சென்னை நகர மையப் பகுதிகளில் உள்ளது போன்ற நவீன மின் விளக்குகள் ஒரே சீராக மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் பொருத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும், மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனும் 1,10,000 எண்ணிக்கையில்  மின்சாரத்தை சேமிக்கும்  வகையிலான தெரு விளக்குகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சென்னை மாநகருக்கு நிகராக புதிதாக இணைக்கப்பட்டுள்ள விரிவாக்கப் பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய்கள், தெரு விளக்குகள், நடை பாதைகள், தெரு கலன்கள் மற்றும் சேவைத் துறையினருக்கான அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த சாலைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் நிதி ஆண்டில் 175.36 கிலோ மீட்டர் நீளமுள்ள 360 எண்ணிக்கையிலான சாலைகளில் 333 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2012-13 ஆம் நிதி ஆண்டில் 122 கிலோ மீட்டர் நீளமுள்ள 513 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளில் 253 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன் தொடர்ச்சியாக 2013-14 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் 225 கிலோ மீட்டர் நீளமுள்ள 900 சாலைகளில் ஒருங்கிணைந்த சாலைகள் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம் சென்னை விரைவில் எழில்மிகு சென்னையாக உருவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்