முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.25-க்கு குவார்ட்டர்: உத்தர பிரதேச அரசு அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஏப். 17 - மது கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தர பிரதேச அரசு ஏழை மக்களுக்காக ரூ. 25 க்கு குவார்ட்டர் மது விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உத்தர பிரதேச அரசு ஏழைகளின் நலன் கருதியும், மது கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ரூ. 25க்கு குவார்ட்டர் மது விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மது எல்லையோரப் பகுதிகளில் உள்ள சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட கலால் துறை அதிகாரி குல்தீப் யாதவ் கூறுகையில்,

தற்போது உத்தர பிரதேசத்தில் குவார்ட்டர் நாட்டு சரக்கு ரூ. 45 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதில் 36 சதவீதம் மது உள்ளது. குவார்ட்டர் பாட்டிலை ரூ. 30 க்கு வாங்க ஏழை மக்கள் அரியானா வரை செல்கின்றனர். அதில் 28 சதவீதம் மது உள்ளது. வினியோகஸ்தர்கள் மதுவை கடத்தி வந்து விற்பதுடன் கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு கலப்படம் செய்கின்றனர். இந்த மதுவை வாங்கி குடிப்பவர்கள் உயிர் இழக்கின்றனர்.

ஏழை மக்கள் மது மலிவாக கிடைக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கின்றனர். கலப்படத்தை கண்டுகொள்வதில்லை. ஏப்ரல் 1 ம் தேதி முதல் மதுவின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டு சரக்கின் விலை குவார்ட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குவார்ட்டர் நாட்டு சரக்கின் விலை ரூ. 50. இந்நிலையில் தான் ரூ. 25க்கு குவார்ட்டர் திட்டம் மது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் அரியானா சென்று மது வாங்கத் தேவையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago