முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குத்துச்சண்டை வீரரின் பெற்றோர் தீக்குளிப்பு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - குத்துச்சண்டை வீரரை தாக்கியதாக பயிற்சியாளர் மீது வீரரின் பெற்றோர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். பயிற்சியாளரை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம் என அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

பெரம்பூர் தீட்டிதோட்டம் 4-வது தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி லட்சுமி, இவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று காலை புகார் மனு அளித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேரும் குத்துச்சண்டை வீரர்கள் மூத்த மகள் சத்தீஸ்வரி, மகன் சதீஷ்குமார், மகள் பிரியங்கா ஆகிய மூவரும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தில் பயிற்சி பெற்று வருகிறன்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குத்துச்சண்டை சங்க செயலாளர் கருணாநகரன் மீது துளசி என்பவர், பாலியல் தொல்லை தருவதாக பொய் புகார் கொடுத்தார். இதற்கு காரணம் பயிற்சியாளர் தேவானந்தம், பதவிக்கு ஆசைப்பட்டு இது போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார். அந்த பொய் புகாரை எதிர்த்து பயிற்சி பெறும் குத்துச்சண்டை வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் எனது மகன் சதீஷ்குமார் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறான். அதில் கலந்து கொள்ள மருத்துவ சான்றிதழ் வாங்க, நேற்றிரவு நேரு ஸ்டேசியத்துக்கு வந்தார். அப்போது பயிற்சியாளர் தேவானந்தத்தின் ஆட்கள் 5 பேர், எனது மகனை அடித்து, உதைத்துள்ளனர். கருணாகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஏன் புகார் கொடுத்தீர்கள் என கூறியபடியே தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும் கத்தியால் குத்த முயன்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் 5 பேரும் ஓடி விட்டனர். இதில் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனது மகன், தேசிய அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேவானந்தம் இருக்கும் வரை பயிற்சி பெறும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் உயிருக்கு ஆபத்துதான். அவரை கைது செய்யாவிட்டால், நாங்கள் தீக்குளிப்போம். இது தொடர்பாக கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!