முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனாஜியில் 5 பேர் கும்பலால் சிறுமி பாலியல் பலாத்காரம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஏப்ரல்.18 - கோவா மாநிலம், பனாஜியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுபற்றி போலீஸ் சூப்பிரண்ட் விஸ்ராம்போர்கர் கூறியதாவது: பனாஜியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் இச்சிறுமியை ஏமாற்றி         

பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. இதனால் உயிருக்குப் பயந்த அந்த சிறுமி இந்த சம்பவம் பற்றி எவரிடமும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அந்த சிறுமியை அந்த கயவர்கள் கூட்டம் அடிக்கடி மிரட்டியதால் தனக்கு நேர்ந்த சம்பவம்பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகுதான் அவர்கள் துணிந்து வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து 20 நாள்கள் ஆனது. அதுவரை அந்த சிறுமியை அந்த கயவர்கள் மிரட்டி வந்துள்ளனர். போலீஸாருக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது என்று கூறி அவர்கள் மிரட்டியுள்ளனர். இவர்கள் 5 பேரும் திட்டம்போட்டு தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். அதாவது குற்றம்புரிந்த காமுகர்களில் ஒருவன் இந்த சிறுமியிடம் வந்து எனது தாய் உன்னிடம் பேச விரும்புகிறார். எனவே நீ  எங்கள் வீட்டுக்கு அவசியம் வரவேன்டும் என்று கூறியுள்ளான்.

இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமி அவனது வீட்டுக்குச் சென்றாள். ஆனால் அங்கே அவனது நண்பர்கள் அனைவரும் சிறுமியின் வருகைக்காக காத்திருந்த விஷயம் அவளுக்குத் தெரியவில்லை. சிறுமி அங்கே சென்றதும் அவளுக்கு உணவு கொடுத்து உபசரித்துள்ளான். பின்னர் அவளுக்கு வலுக்கட்டாயமாக ஏதோ ஒரு வகையான பானத்தைக் கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளான். அதை குடித்த அந்த சிறுமி அங்கேயே மயக்கமடைந்தாள்.

பின்னர் அவர்கள் 5 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி பள்ளிக்கூடம் செல்லும் அந்த சிறுமி யாரிடமும் எதையும் தெரிவிக்கவில்லை. பின்னர் அவர்கள் வந்து அடிக்கடி மிரட்டவே இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்குப் பிறகே அவர்கள் காவல் நிலையத்தில் புகார்செய்தனர். அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. அகற்காகக் காத்திருக்கிறோம் என்று எஸ்.பி.விஸ்ராம்போர்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago