முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் திடீர் குண்டுவெடிப்பு - 16 பேர் காயம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஏப்.18 - பெங்களூரில் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நேற்றுக்காலையில் திடீரென்று குண்டுவெடித்தது. இதில் 8 போலீசார் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். அதனால் அனைத்துக்கட்சிகளின் அலுவலகங்களில் கட்சிக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. 

பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் கட்சி வேட்பாளர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் கூடியிருந்தனர். திடீரென்று நேற்றுக்காலை சரியாக 10.30 மணி அளவில் குண்டுவெடித்தது. அதில் 8 போலீசார் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பானது ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கப்பட்டுள்ளது. 16 பேர் படுகாயம் அடைந்ததோடு மோட்டார் சைக்கிளுக்கு இருபக்கமும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பல எரிந்து சாம்பலாகின. கார்கள் எரிந்து சேதம் அடைந்ததால் காரில் இருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகப்பட்டனர். பின்னர்தான் தெரிந்தது இது குண்டுவெடிப்பு என்று மக்கள் நடமாட்டம் அதிகமாகவும் பாரதிய ஜனதா அலுவலகம் அதிக அளவில் இருக்கும் இடத்தில் மோட்டார் சைக்களும் எரிந்துகிடந்தது. அதில்தான் குண்டுவைக்கப்பட்டு வெடிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆர். அவ்ரேதாகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் முழுவதும் எரிந்ததால் மோட்டார் சைக்கிளில் குண்டுவெடித்தது தெரியவந்தது என்றும் அவர் கூறினார். கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அதற்கிடையே மோட்டார் சைக்களில் குண்டுவைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் யாருக்கும் பலத்த காயம் இல்லை. காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் லால்ரோஹூமா பச்சாவ் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு தொடர்ந்து புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் பச்சாவ் மேலும் கூறினார். 

இதற்கிடையில் இந்த குண்டுவெடிப்பை தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது. இந்த சம்பவத்தையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்