முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக்ஸ் பேச்சு: மத்தியபிரதேச மாநில மந்திரி ராஜினாமா

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஏப்ரல்.18 - மத்தியபிரதேச மாநில மந்திரி விஜய் ஷா, செக்ஸ் பேச்சு காரணமாக தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜகவை சேர்ந்த சிவராஜ்சிங் செளகான் முதலமைச்சராக உள்ளார். இவரது அமைச்சரவையில் பழங்குடியினர் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தவர் விஜய்ஷா.

  ஆபாசமாகப் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகானிடம் கொடுத்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் ஜபுவா என்ற இடத்தில் பேசும்போது, முதலமைச்சர் சிவராஜ்சிங் செளகானின் மனைவி சத்னா சிங் பற்றி தவறுதலாக ஏதோ சொல்லிவிட்டார்.

 இது பெரும் பிரச்சனையாகிவிட்டது. இதையடுத்து மாநில பாஜக தலைவர் நரேந்திரசிங் டோமர், அவரது பேச்சு பற்றி விஜய்ஷாவை அழைத்து விசாரித்தார். அப்போது அவரிடம் தனது பேச்சு பற்றி விஜய் ஷா விளக்கமளித்துள்ளார்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே நான் அப்படி பேசினேன். தவறாக நான் எதையும் பேசவில்லை என்று அவர் தன்னிலை விளக்கமளித்தார். இதை நரேந்திரசிங் ஏற்கவில்லை. அவர் அதிருப்தி அடைந்தார். எனவே விஜய் ஷாவை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து தனது அமைச்சர் பதவியை விஜய் ஷா ராஜினாமா செய்துள்ளார்.    

இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டது  காங்கிரஸ் கட்சி. இந்த பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் முதல்வர் சிவராஜ்சிங் செளகான் ஏன் இன்னும் மவுனம் சாதிக்கிறார். அவரது மவுனம் எப்போது கலையும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் புரியா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங் ஆகியோர் கேள்விமேல் கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கிடையே போபால் பகுதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அட்டைகளை ஏந்திக்கொண்டு தெருவில் நின்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த அட்டைகளில் முதல்வரின் மனைவி சத்னாவின் மரியாதையை காக்கவே நாங்கள் போராடுகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மத்தியபிரதேசத்தில்  பாஜக ஆட்சி முதல்வர் சிவராஜ்சிங் செளகான் தலைஐமயில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் மனைவியின் மானம் காக்கவே நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுவது பாஜகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்