முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் குண்டு வெடிப்பு: பா.ஜ.க. கடும் கண்டனம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

ஹைதராபாத், ஏப்ரல்.18 - பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 16 பர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வெங்கைய நாயுடு கூறியதாவது: பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்துள்ளது. இதில் 16 பேர் காயமடைந்துள்னர். இதனை கடுமையாகக் கண்டிக்கிறேன். இதுதொடர்பாக சரியான தகவல் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.

இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, கர்நாடக அரசும், மத்திய அரசும் இணைந்து ஒத்துழைத்து, அங்கு என்ன நடந்தது என்பதை உடனடியாகக் கண்டறிந்து, இதற்கு யார் பொறுப்பு என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

 நாடு இது விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனென்றால் நாட்டில் பல பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, உண்மையை கண்டறிய வேண்டும்.மனிதாபிமானமற்ற இச்செயல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டார். 

 பெங்களூரில் பாஜக அலுவலகத்துக்கு வெளியே மோட்டார் பைக்கில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 5-ம்தேதி சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் குண்டு வெடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்