முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைபுனிஷா உட்பட 7 பேர் சரணடைய கால அவகாசம்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 19 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைய சுப்ரீம் கோர்ட் 4 வார கால அவகாசம் அளித்துள்ளது. 1993 ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை அண்மையில் சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி இருந்தது. அதில் பலரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததைத் தொடர்ந்து தாம் நீதிமன்றத்தில் சரணடைய 6 மாத கால அவகாசம் கோரி பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு 4 வார கால அவகாசம் மட்டுமே சுப்ரீம் கோர்ட் கொடுத்தது. 

இதேபோல் சைபுனிஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததிருந்தது. இந்நிலையில் அல்டாப் அலி சையத், அன்ஜூம் அப்துல் ரஜாக் மற்றும் யூசுப் நுல்வாலியா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய சுப்ரீம் கோர்ட் நேற்று 4 வார கால அவகாசம் கொடுத்தது. மேலும் கால அவகாசம் நிராகரிக்கப்பட்ட சைபுனிஷா உள்ளிட்டோர் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. சைபுனிஷா உள்ளிட்ட 4 பேருக்கும் சரணடைய சுப்ரீம் கோர்ட் 4 வார கால அவகாசம் அளித்தது. தற்போது சஞ்சய்தத் உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்