முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அரசு வெப் சைட்டுகளை ஹேக் செய்த விஷமிகள்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப். 19 - இலங்கை அரசின் 3 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே 22 அரசு இணையதளங்களை என்ற ஹேக்கர்ஸ் குழு முடக்கியது. தற்போது அக்குழு இலங்கை அரசின் மூன்று இணையதளங்களை ஹேக் செய்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையதளம், நாடாளுமன்ற சபை முதல்வரின் இணையதளம், தயட்ட குருள்ள கண்காட்சி இணையதளம் ஆகியவை ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளன. 

இஸ்லாம் மதம் அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை. இதை நிறுத்துங்கள் என்று சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையதளங்களும் மீண்டும் இயங்க துவங்கி விட்டது என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்