முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுமை வீடு திட்டத்தில் நெசவாளிகளுக்கு கூடுதல் வீடுகள்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் கைத்தறி கதர் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மோகன்ராஜ்:- பசுமை வீடுகள் திட்டம் நெசவாளர்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் சுந்தர்ராஜ்:- ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு பாராமல் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.

மோகன்ராஜ்:- மின்தடை காரணமாக இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களால் தற்போது அந்த பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. வேறு கூலி வேலைக்கு செல்கிறார்கள். எனவே நெசவு தொழில் பாதிக்காமல் இருக்க பசுமை வீடுகள் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்:- பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் சூரிய மின் சக்தியுடன் சோலார் விளக்குகள் உள்ளதால் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜெயலலிதா:- பசுமை வீடுகள் திட்டம் என்பதே சூரிய மின் சக்தியால் மின்சாரம் கிடைக்கும் வகையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அந்த திட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: அதனால்தான் பசுமை வீடுகள் திட்டத்தை பேசுகிறோம்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இந்த திட்டத்தை பற்றி ஏற்கனவே நான் தெரிவித்தபோது அன்றைக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவைக்கு வரவில்லை. இந்த திட்டத்துக்கு ஒரு வீட்டுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தியபோது 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு வீடு கட்டுவதற்கான கட்டுமான செலவாகும். 30 ஆயிரம் ரூபாய் சூரிய மின்சக்தி அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன்:- பசுமை வீடுகள் திட்டத்தை நான் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். வீடு கிடைத்தவர்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்துகிறார்கள். மின்தடை நிலவுவதால் எல்லா கைத்தறி நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கிடைத்தால் பாதிப்பின்றி நெசவு தொழில் செய்யமுடியும் என்ற அடிப்படையில் எங்கள் உறுப்பினர் கேட்டார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இதற்கு முன்பு உறுப்பினர் பேசும்போது பசுமை வீடுகள் கட்டுவது வருடத்துக்கு 60 ஆயிரம் என்றாலும் 5 வருடத்துக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படுவதாகவும், இதில் நெசவாளர்களுக்கு எத்தனை வீடுகள் கிடைக்கும் என்றும் அதிக வீடுகள்  ஒதுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்.

மொத்தம் 3 லட்சம் பசுமை வீடுகள் மட்டுமல்ல நெசவாளர்களுக்காக அதிகப்படியான வீடுகள் கட்ட இந்த அரசு பரிசீலிக்கிறது. விரைவில் இதற்கும் ஒரு அறிவிப்பு வரும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி:- அனைத்து நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உடனே அறிவித்துள்ளதற்கு நீங்கள் நன்றி கூறுங்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒரு வினா எழுப்பியதும் அதனை உடனே செய்து கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு நீங்கள் நன்றி கூறினால் நன்றி உடையவர்களாக இருப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறியதும் தே.மு.தி.க. உறுப்பினர் மோகன்ராஜ் நன்றி தெரிவித்தார். அவரை தொடர்ந்து உறுப்பினர்கள் சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக வாழும் கைத்தறி நெசவாளர்களுக்கும் தனியாக பசுமை வீடுகள் கிடைக்க வழி செய்துவரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்