முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுடன் உ.பி. முதல்வர் சந்திப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.23 - முதல்வர் ஜெயலலிதாவுடன் உ.பி.முதல்வர் அகிலேஷ்யாதவ் சந்தித்து பேசினார். உத்திரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை அகிலேஷ்யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 25 நிமிடத்திற்கு மேல் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போது இந்திய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.

சந்திப்புக்கு பின்னர் அகிலேஷ்யாதவ் புறப்பட்டு சென்றார் முன்னதாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் அகிலேஷ்யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பணவீக்கம் அதிகரித்து விட்டது எல்லைப்பகுதியில் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இந்த விஷயங்களில் மத்திய காங்கிரஸ் அரசு சமாளிக்க தவறிவிட்டது தோல்வி அடைந்துவிட்டது என்று கூட செல்லாலாம் பா.ஜ.கவும் மக்கள் பிரச்சினைகளை சந்திப்பதில் தவறு செய்து வருகிறது.

காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத 3-வது அணி அமையக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அப்படியொரு புதிய கூட்டணி உறுதியாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

விவசாயிகள், அடிதட்டுமக்கள் ஆகியோரின் கஷ்டத்தை உணர்ந்த ஒருவர் தான் பிரதமராக வரமுடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்