முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறை பணியாளர்களுக்கு கைப்பேசி கட்டண வசதி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - காவல்துறை பணியாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கும் கைப்பேசி கட்டண வசதி செய்து தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கைக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு பேசியதாவது:- உதவி காவல் ஆய்வாளர் முதல் காவல் துறை தலைமை இயக்குநர் நிலை வரை கைபேசியை பயன்படுத்தும் 12,000 காவல் துறை பணியாளர்கள் தற்பொழுது உள்வட்ட உபயோகிப்பாளர் குழு, என்னும்  திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு அதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி வருகின்றது. காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் பணி நிமித்தம் காரணமாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும், ஒரு குடும்ப உணர்வுடன் பழகும் வகையிலும், அவர்களிடையே ஓர் இணக்கமான உறவை ஏற்படுத்தும் வகையிலும், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இது மட்டுமல்லாமல், காவல் துறை பணியாளர்களின் குடும்பங்களும் சலுகை கட்டண வசதி பெறும் வகையில் அவர்களும் இந்த உள்வட்ட உபயோகிப்பாளர் குழு  திட்டத்தில் இணைய வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்