முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி ஈழம்தான் தீர்வு - கருணாநிதி புதிய முடிவு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - தனி ஈழம் தான் தீர்வு ஏற்படும் என்று கருணாநிதி கூறினார். தி.மு.க. உயர்நிலை மட்டகுழு கூட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். 

அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

 

  • கே:​ சி.பி.ஐ. நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா? 

 

  • ப:​ நிறைவேற்றிய எங்கள் தீர்மானத்தில் இது பற்றி சொல்லி இருக்கிறோம். 

 

  • கே:​ இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? ப:​ தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட சங்கடம் எங்களுக்கு ஏற்படாது. என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை. 

 

  • கே:​ இந்த வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பற்றி ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று கூறியிருக்கிறீர்களே? 

 

  • ப:​ ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகை படிப்பவர்கள், மாலை​இரவு டி.வி.யை பார்ப்பவர்களுக்கு இது தெரியும். 

 

  • கே:​ இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். கனிமொழி முன் ஜாமீன் வாங்குவாரா?

 

  • ப:​ இப்போது அது பற்றி சொல்ல இயலாது. இந்த வழக்கில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.

 

  • கே:​ அடுத்த மாதம் 6​ந்தேதி ஆஜராக வேண்டும் என்ற சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுப்படி கனிமொழி ஆஜர் ஆவாரா? 

 

  • ப:​ சட்டப்படி அவர் நடந்து கொள்வார். 

 

  • கே:​ போபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. முறையாக செயல்படவில்லை என்ற கருத்து உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. நடந்து கொள்ளும் முறைப்பற்றி உங்கள் கருத்து என்ன? 

 

  • ப:​ பழைய விவகாரங்களை கிளற விரும்பவில்லை. 

 

  • கே:​ இலங்கையில் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகவும், இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. அறிவித்து உள்ளது. இந்தப் பிரச்சினையில் நீnullங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? 

 

  • ப:​ இது குறித்தும் தீர்மானம் போட்டிருக்கிறோம். எங்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம். 

 

  • கே:​ இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கருத்து கூறியிருக்கிறாரே? 

 

  • ப:​ அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. 

 

  • கே:​ இலங்கையில் தனி ஈழம் அமைய மத்திய அரசு உதவவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே? 

 

  • ப:​ அங்கு தனிஈழம் அமைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். இன்று நேற்றல்ல, தந்தை செல்வா காலத்திலேயே தனி ஈழம் எங்கள் குறிக்கோள் என்பதை கூறியிருக்கிறோம். அதனை அடைவதற்கு முன்பு இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் ஆகியோருக்கு இடையே சமத்துவ நிலை உருவாக வரைமுறைகளை வகுக்கவேண்டும் என்பது நாங்கள் வற்புறுத்தும் வேண்டுகோள்.

 

  • கே:​ 87 வயதான உங்களுக்கு nullநீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. ஊடகங்களும், சில சதிகளும் உங்களை தலைமைப் பதவியில் இருந்து அகற்றி விடும் என்று நம்புகிறீர்களா? 

 

  • ப:​ இயற்கை ஒன்றுதான் என்னை அகற்ற முடியும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்