முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

251 காவல் நிலையங்களை சிசிடிவி மூலம் இணைப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - 251 காவல் நிலையங்கள் சி.சி.டி.வி தொலைக்காட்சி வசதிகள் மூலம் இணைக்கப்படும் என்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:- தற்போது மாநிலத்தில் 60 புறக்காவல் நிலையங்கள் உள்ளன.  கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 13 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் 

முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. மேலும், 2012-13ம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 12 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.  அதே போல் இந்த ஆண்டில் 13 கோடி ரூபாய் செலவில், 12 புறக் காவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

காவல் துறை பணியாளர்களுக்கென உங்கள் சொந்த இல்லம் எனும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தாலுக்கா மேலகோட்டையூரில் 47.6 ஏக்கர் நிலப்பரப்பில் 

2,673 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு 26.10.2012 அன்று நான் அடிக்கல் நாட்டினேன்.  

இந்த திட்டப் பயனாளிகளின் நலன் கருதியும், மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல் துறையினரின் நலன் கருதியும், மேலக்கோட்டைக்ஷ்ரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் தரம் பொருந்திய உறைவிடப் பள்ளி ஒன்று தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

காவல் துறை பணியாளர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினரின் உடலுறுதியை மேம்படுத்த உதவும் உடற் பயிற்சிக் கூடங்களை அனைத்துக் காவல் நிலையங்களிலும் அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.   முதல் கட்டமாக, நடப்பாண்டில் 200 ஊரக காவல் நிலையங்களில் உடற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 

காவல் துறையின் தகவல் பரிமாற்றத்திற்கென தற்போது 4758 மிக உயர் அலை கைபேசி கருவிகள்,  2826 மிக உயர் அலை நிலை கருவிகள்,  11850 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள்,  மற்றும் 268 மிக உயர் அலை திருப்பி வானொலி கருவிகள்,  என மொத்தம் 19702 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டில் மேலும் 1210 கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டது.

காவல் துறையில் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்திட 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 350  மிக உயர் அலை கைபேசி கருவிகள்,  250 மிக உயர் அலை நிலைக் கருவிகள்,  550 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள்,  மற்றும் 250 மிக உயர் அலை கையடக்க வானொலி பெட்டிகள், அதாவது ஆகியவை வழங்கப்படும். இது விரைவான தகவல் பரிமாற்றத்திற்கும், துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவியாக அமையும்.  

காவல் துறையின் அடிப்படை அலகுகள் காவல் நிலையங்களாகும்.  இந்தக் காவல் நிலையங்களிலிருந்து தான், பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெறுவது, அவர்களின் குறைகளைத் தீர்ப்பது போன்ற அத்தியாவசியப் பணிகளை காவல் துறையினர் மேற்கொள்கின்றனர். 

  இந்தக் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில், முதற்கட்டமாக 251 காவல் நிலையங்களில் 1 கோடியே 75 லட்சம் பொய் செலவில் 

உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சி வசதிகள்,  அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை ஒரு வெளிப்படையான, ஒளிவு  மறைவில்லாத நிர்வாகம் ஏற்பட வழி வகுக்கும்.  

பாதுகாப்புப் பணியில் ்டுபடும் சிறப்புப் பணி காவல் படையினருக்கும்,  ஆயுதப் படையினருக்கும் தக்க தங்கும் வசதி வழங்குதல் அவசியமாகும்.

இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 கோடியே 26 லட்சம் பொய் செலவில் ராமநாதபுரம், மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஐந்து துயில் கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள  ஆயுதப்படை வளாகத்தில் காவலர் 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஆண்டு 2 கோடியே 57 லட்சம் பொய் செலவில் காவலர் படைக் குடியிருப்புகள் கட்டப்படும்.

அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளில்  காவல் உணவகம் அமைத்தல்.

தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் ஒவ்வொரு நிறுமத்திலும் ஒவ்வொரு காவல் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த உணவகம் ஸஹடூக்ஷச்ஸசீஙூசி  பணியில் ஈடுபடும் காவலர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. இது போன்ற வசதிகள் காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளிலும் இல்லை.

வேலை நிறுத்தம், கடை அடைப்பு போன்ற நேரங்களில் பாதுகாப்பு பணியில் ்டுபடும் காவல் துறையினருக்கு உணவு வசதிகளை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு காவல் ஆணையரகத்திலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவிலும் ஒரு காவல் உணவகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 10 மாவட்டங்களில்  தங்கும் விடுதிகள் அமைத்தல்.

காவல் துறையினர் பணி நிமித்தமாக மாவட்ட தலைநகரங்களுக்கு செல்லும்  போது, தங்கும் விடுதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வண்ணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கும் விடுதிகளை அமைக்க எனது தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 10 மாவட்டத் தலைநகரங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில்  தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். 

500 காவல் நிலையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க சரிய சக்தியால் இயங்கும்  அமைப்புகளை நிறுவுதல்.

தமிழ்நாடு சரிய சக்தி கொள்கை 2012-ல், அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களின் மேற்கூரைகளில் படிப்படியாக சரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்படும் என்பதற்கேற்பவும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் திட்டத்தினை செயல்படுத்தும் காவல் நிலையங்களுக்கு தடையில்லா மின்சக்தி வழங்குவது அவசியம் என்பதன் அடிப்படையிலும், அனைத்து காவல் நிலையங்களிலும் சரிய சக்தியால் இயங்கக்  கூடிய மின்சார அமைப்புகளை ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 500 காவல் நிலையங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் சரிய சக்தியால் இயங்கக் கூடிய மின்சார அமைப்புகள் பொருத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்