முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி முழு நிலவுவிழா

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

கம்பம் ஏப்ரல் - 26 - மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் மங்கல தேவி கண்ணகி கோவில் தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லைப்பகுதியான பனியன்குடி மலை உச்சியில் அமைந்துள்ளது இக்கோவிலில் திருவிழாவையொட்டி கோவில் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கண்ணகி தேவி பச்சைபட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கண்ணகி தேவிக்கு காலை 5 மணிமுதல் லட்சாாச்சனை நடை பெற்றது பக்தர்கள் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பாதை வழியாக பாலமுருகன் கோவில் பளியன்குடி அத்தியுத்து வழியாக நடைபயணமாகவும் குமுளியில் இருந்து பஸ்ஸ்டாண்ட் அம்பாடிஓட்டல் கொக்கரக்கண்டம் வழியாக ஜீப் காரிலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர் பக்தர்கள் மெடல்டிடெக்டர் மூலம்  கடும் சோதனைக்கு ப்பிறகு கோவில் செல்ல கேரள போலீசார் அனுமதித்தனர் பக்தர்களின் வசதிக்காக நடந்து செல்லும் பாதையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது அதிகாலை 5.30 மணி முதல் மாலை 3மணி வரை மட்டுமே கொக்கரக்கண்டம் செக்போஸ்ட் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கோவிலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை கோவில் வளாகம் பகுதியில் தமிழக கேரள சுகதாரத்துறை சார்பில் மருத்து முகாம் வசதி செய்யப்பட்டிருந்தது பக்தர்களுக்கு கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது தமிழக போலீசார் 270 பேரும் கேரள போலீசார் 250 பேரும் பாதுகாப்பு பணியில் ்டுபடுத்தப்பட்டனர் இவர்கள் தவிர தமிழக கேரள வனத்துறையினரும் இப்பணியில் ்டுபடுத்தப்பட்டனர் இதே போல் கேரள  போலீசார் குமுளியில் இருந்து கோவில் வரை ஜீப்கார் செல்லும் பாதையில் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்தனர் கோவிலுக்கு குமுளி  பஸ்ஸடாண்ட்ல் இருந்து ஜீப்காரில் ஓரு நபருக்கு ரூ 60 கட்டணமாகவும் கோவில் இருந்து குமுளிக்கு ரூ 50 கட்டணம் வசூலிக்கப்பட்டது குமுளி பஸ்ஸ்ாடண்டிலும் கோவில் வளாகத்திலும் பக்தர்கள் வரிசையாக செல்ல கம்பு கட்டி பக்தர்கள் ஜீப் கார்கள் செல்ல போலீசார் வரிசைப்படுத்தினர் இதனால் பக்தர்கள் தள்ளு முள்ளு ஏற்படாமால் வரிசையாக சென்றனர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு கூடராம் அமைக்கபட்டிருந்தது கம்பம் கூடலுாரில் இருந்து பளியன்குடிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்