இடதுசாரிகள் அகில இந்திய அரசியல் மாநாடு நடத்த முடிவு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 27 - டெல்லியில் வரும் ஜூலை மாதம் அகில இந்திய அரசியல் மாநாட்டை நடத்த இடதுசாரிகள் முடிவு செய்துள்ளன என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார். டெல்லியில் நான்கு இடதுசாரி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அபானிராய், பார்வர்டுபிளாக் பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜா, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள நெருக்கடியான அரசியல் நிலைமையை சமாளிப்பதில் இடதுசாரி கட்சிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்குவது குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூலை மாதம் டெல்லியில் அகில இந்திய அளவிலான அரசியல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: