முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடந்த காவல் துறையினர் குடும்பங்களுக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - பணியின் போது அகால மரணமடந்த  4 காவல் துறையினர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-  

சேலம் மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.ராஜசேகர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 17.4.2013 அன்று காலமானார் என்ற செய்தியையும்;

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராகப் பணிபுரிந்து வந்த ஊ.குப்புசாமி  உடல்நலக் குறைவால் 17.4.2013 அன்று  காலமானார் என்ற செய்தியையும்;

சென்னை பெருநகர காவல் தொலைத் தொடர்பு பிரிவின் தலைமை கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த  ஜெயராமுலு  உடல் நலக்குறைவால்  21.4.2013 அன்று  காலமானார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சங்கர்பிரசாத்   22.4.2013 அன்று அழகுகவுண்டன் வலசு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறை உதவி ஆய்வாளர்  ஜெயராமுலு, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகர்,  முதல் நிலைக் காவலர் குப்புசாமி மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் சங்கர்பிரசாத் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் நலக்குறைவால் காலமான காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெயராமுலு, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகர், முதல் நிலைக் காவலர் குப்புசாமி மற்றும் சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டாம் நிலைக் காவலர் சங்கர்பிரசாத் ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  தலா  ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago