ஆக்ராவில் நடந்த அக்கிரமம்: சிறுமி கற்பழித்து கொலை

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

ஆக்ரா,ஏப்.27 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் கட்சுவாலா என்ற பகுதியில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் இல்லத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள சென்ற 6 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார். அந்த சிறுமியின் கழுத்தை சுற்றி வயரால் நெரிக்கப்பட்டிருந்த அடையாளங்கள் காணப்பட்டன. அந்த சிறுமியின் தலையோ கற்களால் நசுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள தனது இரண்டு சகோதரிகளுடன் சென்றுள்ளார். ஆனால் போனபடி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்களும் உறவினர்களும் சேர்ந்து நாலாபக்கமும் தேடினர். இறுதியில் அந்தசிறுமியின் உடல் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கூரை மேல் கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த சிறுமியின் ஆடைகள் களையப்பட்டுக்கிடந்தன. தலையோ கற்களால் நசுக்கப்பட்டதுபோல் காணப்பட்டது. கீழ்தளத்தில் இருந்து மேல் கூரைக்கு ஒரு வயர் மூலம் அந்த சிறுமியின் உடலை மேலே இழுத்ததுபோல் காணப்பட்டது. அந்த இடம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. இதுபற்றி கூறிய போலீசார் இரண்டு பேரை தாம் சந்தேகப்படுவதாகவும் அவர்கள் அருகில் வசித்தவர்கள் தற்போது தலைமறைவாகிவிட்டனர் என்று தெரிவித்தனர். சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிறுமிகள் கற்பழிக்கப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: