கர்நாடக சட்டசபை தேர்தல்: சோனியா இன்றுமுதல் கட்டபிரசாரம்

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

பெங்களுர்: ஏப், - 28 - கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாலர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டிட்யிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் கட்டமாக சிக்மகள?ரில் காலை 10 மணிக்கும், மங்கள?ரில் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்ற இருக்கிறார். பின்னர் வரும் 2-ந் தேதி 2வது கட்டமாக குல்பர்காவில் பேசுகிறார். இன்று பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்றஅருண் ஜேட்லி, உமாபாரதி, வருண் காந்தி ஆகியோர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் இன்று சிமோகா மாவட்டம் சாகருக்கு வருகிறார். அங்கு தேர்தல் தொடர்பாக நடைபெறும் சிமோகா மற்றும் உத்தர கன்னடா மாவட்ட கட்சி நிர்வாகிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: