முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் லெவன் அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா, ஏப். - 28 - ஐ.பி.எல். - 6 போட்டியில் கொல்கத் தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெ வன் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், துவக்க வீரர் பிஸ்லா அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றார். அவருக் குப் பக்கபலமாக மார்கன் மற்றும் கா லிஸ் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, கா லிஸ் சிறப்பாக பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவ ருக்கு ஆதரவாக பாலாஜி, லட்டா மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் பந்து வீசினர். ஐ.பி.எல். போட்டியின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்னை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில், வொக்ரா அதி கபட்சமாக, 21 பந்தில் 31 ரன்னைஎடு த்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடித்தார். தவிர, கேப்டன் கில்கிறி ஸ்ட் 27 ரன்னையும், மந்தீப் சிங் 25 ரன் னையும், டேவிட் ஹஸ்சே 21 ரன்னையும், குர்கீரத்சிங் 28 ரன்னையும், மில் லர் 10 ரன்னையும் எடுத்தனர். கொல்கத்தா அணி 150 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை பஞ்சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்னை எடுத்தது. இதனால் இந்த லீக் ஆட்டத்தில் கொ ல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர் பிஸ்லா அதிரடியாக ஆடி 44 பந்தி ல் 51 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, மார்கன் 26 பந்தில் 42 ரன்னையு ம், காலிஸ் 33 பந்தில் 37 ரன்னையும், எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஆல்ரவுண்டர் அசார் மெக்மூத் 35 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, ஹர்மீத் சிங் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போ ட்டியின் ஆட்டநாயகனாக காலிஸ் தே ர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்