முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேன் வாட்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரவெற்றி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், ஏப். - 28 - ஐ.பி.எல். போட்டியில் ஜெய்பூரில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ராஜ ஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித் தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.  ராஜஸ்தான் அணி தரப்பில் ஆஸ்திரே லிய வீரரான ஷேன் வாட்சன் அதிரடி யாக ஆடி அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் டிராவிட் ஆடி னார்.   முன்னதாக ராஜஸ்தான் அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் பால்க்னர் சிறப் பாக பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டை க் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக சண்டிலா, கூப்பர் மற்றும் ஆர். பின்னி ஆகியோர் பந்து வீசினர்.  ஐ.பி.எல். போட்டியின் 36  - வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் உள்ள சவாய் மா ன் சிங் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. 

முன்னதாக டாசில் வெற்றி பெற்ற ஐத ராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் பி.ஏ.ரெட்டி மற்றும் எஸ். தவான் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர்.  ஐதராபாத் அணி இறுதியில் நிர்ணயிக்க ப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பி ற்கு 144 ரன்னை எடுத்தது.  அந்த அணிசார்பில் 1 வீரர் அரை சதம் அடித்தார். 7 - வது வீரராக இறங்கிய டேரன் சம்மி அதிகபட்சமாக, 41 பந்தில் 60 ரன்னைஎடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, அமித் மிஸ்ரா 21 ரன்னையும், ஆஷிஸ் ரெட்டி 14 ரன் னையும், ஸ்டெயின் 18 ரன்னையும் எடு த்தனர். ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி முதலில் தடுமாறியது. முன்வரிசை வீர ர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந் தனர். அந்த அணி ஒரு கட்டத்தில் 29 ரன்னிற்கு 6 விக்கெட்டை இழந்து தடு மாறியது. பின்பு சம்மி மற்றும் மிஸ்ரா வின் ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. ராஜஸ்தான் அணி சார்பில் வேகப் பந் து வீச்சாளர் பால்க்னர் 20 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர சண்டிலா 2 விக்கெட்டும், கூப்பர் மற்றும் ஆர். பின்னி 1 விக்கெட்டும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 145 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஐதராபாத் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னைஎடு த்தது. இதனால் இந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ் தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி யின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆஸி. வீர ரான ஷேன் வாட்சன் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதை க்கு அழைத்துச் சென்றார். அவர் 53 பந் தில் 98 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவு ண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் டிராவிட் 35 பந்தில் 36 ரன் எடுத்தார்.  இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

ஐதராபாத் அணி சார்பில், ஸ்டெயின் 15 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடு த்தார். பெரீரா 34 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்