முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலக்கோணம்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

எஸ்.ஜே.எஸ். இன்டெர் நேஷனல் சார்பில் திருமலை சிவம் தயாரித்து வரும் படம். தலக்கோணம். இவர் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைக்கச்சேரிகள் நடித்தியிருக்கிறார். தற்போது மெல்லிசைக் கச்சேரிகளும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜிதேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு நடிகை ரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், கஞ்சாகருப்பு, ஃபெரோஸ்கான், நம்பிராஜன், சண்முகசுந்தரம், பாண்டு, காதல் அருண்குமார், நாராயணமூர்த்தி, டெலிபோன் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். அலிஷாகானும் அபிநயஸ்ரீயும் தலா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்கள். ராமலிங்கம் ஒளிப்பதிவு சரவணன், சங்கர், எடிட்டிங் ஆக உள்ளார். பா.விஜய், கானா விஜி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைக்கிறார்கள். சகோதர இசையமைப்பாளர்கள் சுபாஷ் ஜவஹர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.பத்மராஜ், இவர் இயக்குனர் சமுத்திரகனியிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். படத்தைப்பற்றி இயக்குனர் கே.பத்மராஜ் கூறும்போது, கதாநாயகன் ஜிதேஷூம் மந்திரி மகள் ரியாவும் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள். கல்லூரி மாணவ, மாணவியருடன் என்.எஸ்.எஸ்.கேம்ப்க்காக தலக்கோணம் காட்டுப்பகுதிக்குச் செல்கிறார்கள். முகாம் முடிந்து திரும்பும்போது இருவரும் தீவிரவாதி ஜிந்தா குழுவினரால் கடத்தப்படுகிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதும் கடத்தலின் சுவராஸ்யமான பின்னணியும் தான் தலக்கோணம் படத்தின் கதை. உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும், தவறான எண்ணங்களை விளைவிக்கும், தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். சந்தேகம் மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என்கிற கருத்தை மையப்படுத்தியுள்ளோம். ஆரம்பம் முதல் இறுதிவரை முழுக்க முழுக்க தலைக்கோணம், சாலக்குடி போன்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட படம். சஸ்பென்ஸ் திகில் இருந்தாலும் அழுத்தமானகாதலும் சொல்லப்பட்டு இருக்கிறது. இஒளிப்பதிவாளர் இராமலிங்கம் அடர்ந்த காட்டிற்குள் ஜிம்மி ஜிப், ஸ்டெடி காம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்குவதற்கு நான்கு கேமரா செட் ஆப் என்று அத்துனை வசதிகளையும் செய்து கொடுத்தார் தயாரிப்பாளர் திருமலை சிவம் ஆக்ஷன் காட்சிகளை அதிக ரிஸ்க் எடுத்துப் படமாக்கியிருக்கிறோம்.
தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தலக்கோணம் மே மாதம் திரைக்கு வருகிறது என்றார் படத்தின் இயக்குனர் கே.பத்மராஜ்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!