முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா தொழிற்சங்க நலிந்த தொழிலாளர்கள் 106 பேருக்கு தலா 50 ஆயிரம்உதவி:

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 28 - அண்ணா தொழிற்சங்க நலிந்த தொழிலாளர்கள் 106 பேருக்கு தலா 50 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம், மொத்தம் 53 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதி உதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிதியுதவி 8.5.2013 புதன்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் வழங்கப்படும்.  நிதி உதவி பெற உள்ள அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்கள் பெயர் வருமாறு:-

சென்னை: வடசென்னை வடக்கு- கே.மகாதேவி, ஆர்.நெடுஞ்செழியன், வடசென்னை தெற்கு- பி.பாலமுருகன் என்ற பி.பி.முருகன், பி.இளங்கோவன், தென்சென்னை வடக்கு- அ.ஏழுமலை, எஸ்.மணி, தென்சென்னை தெற்கு- ஜி.மணிகண்டன், பி.ஷேக்உமர்.   

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு- ஏ.வள்ளியம்மாள், வி.தவசிக்கண்ணு, காஞ்சிபுரம் மத்தியம்- எஸ்.சுசீலா, கே.கோவிந்தராஜ், காஞ்சிபுரம் மேற்கு- ஆர்.கிருஷ்ணன், க.முருகேசன்.

திருவள்ளூர் வடக்கு- எம்.மதியழகன், எஸ்.விஜயலட்சுமி,​ திருவள்ளூர் தெற்கு- பி.ஏழுமலை, பி.வேலாயுதம், வேலூர் மாநகர்- எஸ்.அமீத் பாஷா, கே.திருப்பதி, வேலூர் புறநகர் கிழக்கு- விஜயா, வெ.பார்த்திபன், வேலூர் புறநகர் மேற்கு- சி.வள்ளிக்கண்ணன், கே.எஸ்.குமார். 

விழுப்புரம்: திருவண்ணாமலை வடக்கு- பி.சாந்தி, ஜி.சீனிவாசன், திருவண்ணாமலை தெறகு- ஏ.மாசிலாமணி, பி.ஜெயபால், கடலூர் கிழக்கு- கே.ஆனந்தன், கே.அலமேலு, கடலூர் மேற்கு- கே.வெங்கடேசன், எம்.ராஜலட்சுமி. 

விழுப்புரம் வடக்கு- எஸ்.கே.ஜானகி, ஆர்.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு- எம்.முருகன்,டி.நாகராஜன், கிருஷ்ணகிரி- பி.பாரத், பி.ராகுல்காந்தி, கே.ஆசிப்அலி, தர்மபுரி- கோ.கோவிந்தன், கே.ஜெயா. 

கோவை: சேலம் மாநகர்- ஏ.கருப்பமுத்து, சி.நாகராஜன், சேலம் புறநகர்- பி.ராஜி, என்.சிவலிங்கம், நாமக்கல்- என்.சாந்தி, வி.ரவிக்குமார், ஈரோடு மாநகர்- எம்.ராஜி, ஏ.நெடுஞ்செழியன், ஈரோடு புறநகர்- வி.சாமியாத்தாள், வி.ராஜன்.

திருப்பூர் மாநகர்- ஆர்.மணி என்ற அண்ணாதுரை, ஆர்.பீஸ்மன், திருப்பூர் புறநகர்- எம்.ராமலிங்கம், ஏ.மீனாம்பிகை, கோவை மாநகர்-கே.முருகன், எஸ்.நடராஜன், கோவை புறநகர்- ஜி.முரளி, ஆர்.விஜயகுமார், நீலகிரி- கே.ராஜேஸ்வரி, பி.தேவராஜ். 

தஞ்சாவூர்: திருச்சி மாநகர்- பி.முத்தையன், கே.எஸ்.ராஜசேகரன், திருச்சி புறநகர்-பேச்சியம்மாள், வி.கனகராஜ், பெரம்பலூர்- ஏ.தெய்வராஜ், த.மதுராதேவி, அரியலூர்- மு.கமலம், என்.சுதா, கரூர்- ஏ.மீனாம்பாள், ஆர்.தினகரன். 

தஞ்சாவூர் வடக்கு- எஸ்.கே.குருமூர்த்தி பாண்டியன், ஜே.சுரேந்திரன், தஞ்சாவூர் தெற்கு- வி.ரவீந்திரா, ஆர்.கிருபாராணி, நாகப்பட்டினம்- டி.சண்முகம், ஜி.குமரேசன், திருவாரூர்- ஏ.நதியா, என்.சரவணன், புதுக்கோட்டை- கெ.ரெங்கராஜி, பி.ராம.பழனியப்பன். 

மதுரை: மதுரை மாநகர்- எம்.மஞ்சுளா, எஸ்.ராஜேந்திரன், மதுரை புறநகர்- சி.சின்னபாண்டி, ஜி.விஜயலட்சுமி, தேனி- பி.உமாபதி, ச.சங்கரநாராயணன், திண்டுக்கல்- கிளாரா கனிமொழி, எஸ்.அர்ச்சுனன். 

விருதுநகர்- கே.சுப்பையா, மு.முத்துமாரி என்ற ஜெயக்கொடி, சிவகங்கை- எம்.முருகேஸ்வரி, எம்.அசோகன், ராமநாதபுரம்- பி.துரைராஜ், எஸ்.செல்வம். 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர்- ஆர்.தங்கமலர், வி.முருகன், திருநெல்வேலி புறநகர் வடக்கு- கே.முத்துலட்சுமி, டி.ரவிக்குமார். 

திருநெல்வேலி புறநகர் தெற்கு- ஏ.செல்வராஜ், எம்.சுடலையாண்டி, தூத்துக்குடி- சந்திரா, எஸ்.நடராஜன், கன்னியாகுமரி- எஸ்.அருமதாஸ், சி.ஜஸ்டஸ், புதுச்சேரி மாநிலம்- பி.மங்கையன், எம்.பாண்டுரங்கன்.     

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்