முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி டேர்டெவில் புனே வாரியர்சை தோற்கடித்தது

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப். 30 - ஐ.பி.எல். - 6 போட்டியில் ராய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 15 ரன் வித்தியா சத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி தர ப்பில் டேவிட் வார்னர் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார். அவருக்கு பக் கபலமாக சேவாக், ஜாதவ், உக்கம்சந் த், கேப்டன் ஜெயவர்த்தனே, ரொக்ரெர் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, உமேஷ் யாதவ் மற்றும் இர்பான் பதான் இருவ ரும் சிக்கனமாக பந்து வீசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக மார்கெல், நெக்ரா மற்றும் நதீம் ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 39-வது லீக் ஆட்டம் ராய்ப்பூரில் உள்ள சகீத் வீரர் நாராயண் சிங் சர்வதேச அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய டெல்லி அணி நன்கு பேட்டிங் செய்து நிர்ணயிக்கபப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்னை எடு த்தது. 

டெல்லி அணி தரப்பில், டேவிட் வார் னர் அதிரடியாக ஆடி 25 பந்தில் 51 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, சேவாக் 26 பந்தில் 28 ரன்னையும், ஜாதவ் 19 பந் தில் 25 ரன்னையும், உக்கம்சந்த் 17 ரன் னையும், கேப்டன் ஜெயவர்த்தனே 12 ரன்னையும், ரொக்ரெர் 13 ரன்னையும் எடுத்தனர். 

புனே அணி சார்பில் டிண்டா 31 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற் றினார். தவிர, ரோகித் சர்மா 1 விக்கெ ட் எடுத்தார். 

புனே வாரியர்ஸ் 165 ரன்னை எடுத்தால் வெற்றி  பெறலாம் என்ற இலக்கை டெல்லி அணி வைத்தது. ஆனால் அடு த்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவ ரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்னையே எடுத்தது. 

இதனால் டெல்லி அணி இந்த லீக் ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அந்த அணிக்கு 2-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

புனே அணி தரப்பில், கேப்டன் பிஞ்ச் 33 பந்தில் 37 ரன் எடுத்தார். ராபின் உத் தப்பா 33 பந்தில் 37 ரன் எடுத்தார். தவிர, யுவராஜ் சிங் 24 பந்தில் 31 ரன் னையும், ஜே. ரைட் 19 ரன்னையும், எஸ்.பி.டி. ஸ்மித் 17 ரன்னையும் எடுத் தனர். 

டெல்லி அணி சார்பில் உமேஷ் யாதவ் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடு த்தார். தவிர, இர்பான் பதான் 29 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்