முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாஸ் மீது வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 -  இரவு 10 மணிக்கு மேல் பேச மாட்டோம் என்று அளித்த உறுதிமொழியை மீறி இரவு 11 மணிக்குமேல் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

11.30 மணிக்கு பேசுகிறேன். போடு வழக்கை,  அதெல்லாம் நமக்கு கவலை கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா இதுபற்றி கூறியதாவது:-

பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது வழக்குப் போடுங்கள்' என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.

இளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.  இளைஞர்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறும் ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா?  இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது?

தமிழ்நாட்டில், புரைண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்