முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜே.கே.எல்.எப். தலைவர் கைது

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஏப்.29 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக் மற்றும் அவரது 3 கூட்டாளிகள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.  ஸ்ரீநகரின் மைசுமா பகுதியில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசுமா காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்த முயன்ற போது மாலிக் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது 3 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதான நால்வரும் கொதிபாக் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு லாக்கப்பில் வைக்கப்பட்டனர். 

கைதான இளைஞரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் மாலிக் கோரிக்கை வைத்தார். ஆனால் அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே கோர்ட்தான் அவருக்கு ஜாமீன் வழங்க முடியும் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்