முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்சின் புனே வாரியர்சுடன் இன்று மோதல்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புனே , ஏப். 30 - ஐ.பி.எல். - 6 போட்டியில் புனேயில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை அணி சமீபத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. எனவே அந் த அணியின் வெற்றிப் பயணம் தொட ருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத் தியில் கிளம்பியுள்ளது. 

சென்னை அணி கடந்த லீக்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். போட்டியி ன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது. 

ஆனால் ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் பாதி முடிவடைந்துள்ள நிலை யில் புனே வாரியர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

தற்போதைய நிலையில் சென்னை அணி பலமாக உள்ளது. பேட்டிங் மற் றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவித்து வருகிறது. 

எனவே இன்றைய போட்டியில் சென் னை அணியின் சவாலை ஏற்று நன்கு ஆட வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு புனேயில் நடந்த லீக் ஆட்டத்தில் புனே வாரியர் ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் சென் னை சூப்பர் கிங்சை தோற்கடித்தது. 

எனவே இன்றைய போட்டியிலும் புனே வாரியர்ஸ் சிறப்பாக ஆடி வெ ற்றி பெற திட்டமிட்டுள்ளது. புனே தற் போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

ஆலன் டொனால்டு பயிற்சியின் கீழ் உள்ள உபுனே வாரியர்ஸ் அணி கடந்த 4 லீக்கில் தொடர்ந்து தோல்வியடைந் துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஞாயிறன்று நடந்த லீக்கில் புனே வா ரியர்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந் தத் தோல்வி புனேவுக்கு மிகவும் பின் னடைவை அளித்தது. 

சென்னை அணி தொடர் வெற்றியால் தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. அந்த அணி வீரர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எந்த அணியின் சவாலையும் சந்திக்கும் அளவிற்கு ஆயத்தமாக உள்ளனர். 

சென்னை அணி கடந்த ஞாயிறன்று நட ப்பு சாம்பியன் கொல்கத்தா ரைடர்சு டன் மோதியது. இதில் 14 ரன் வித்தி யாசத்தில் தோனி அன்ட் கோ வெற்றி பெற்றது. 

தற்போதைய நிலையில் புனே வாரிய  ர்சால் தொடர்ந்து சிறப்பாக ஆட

முடியவில்லை. துவக்க கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடினர். பின்பு பெளலர்கள் மோசமா க பந்து வீசி வருகின்றனர். 

புனே அணி தரப்பில் கேப்டன் பிஞ்ச் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவர் மட்டு ம் சிறப்பாக ஆடி வருகின்றனர். மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்து வருகின்றனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயா  ன இந்த லீக் ஆட்டம் புனேயில் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர் தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிப ரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago