முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டரிடம் ஆலோசனை கேட்க சரப்ஜித்சிங் சகோதரிநாடு திரும்புகிறார்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.- 1 - சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளித்து குறித்து இந்திய டாக்டரிடம் ஆலோசனை கேட்பதற்காக அவரது சகோதரி தல்பீர் கவுர் நாடு திரும்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங் மீது அந்த சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் கொலை தாக்குதல் நடத்தியில் உணர்வு இழந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரப்ஜித் சிங்கின் மூளை செயல் இழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் சிகிச்சைக்காக சரப்ஜித் சிங்கை வெளிநாட்டிற்கு அனுப்ப பாகிஸ்தான் மறுத்து வருகிறது. அதனால் சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனையை கேட்ட அவரது சகோதரி தல்பீர் சிங் நாடு திரும்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞர் அவைஸ் ஷேக்கிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அதேசமயத்தில் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்புகிறார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என்று வழக்கறிஞர் ஷேக் தெரிவித்தார். சரப்ஜித் சிங்கிற்கு செயற்கை சுவாச உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதை எடுத்துவிட அவரது சகோதரி தல்பீர் கவுர்ரிடம் சம்மதித்தார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தல்பீரிடம் கேட்டதற்கு மறுத்தார். சிறைக் கைதிகளால் தாக்கப்பட்டு மயக்கநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சரப்ஜித் சிங்கை பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்றுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago