முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீபுதுமாரியம்மன், ஸ்ரீசொர்ணமுத்துமாரியம்மன் திருவிழா

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

உசிலம்பட்டி மே-1 - உசிலம்பட்டி சேடபட்டி ஒன்றியத்தில் அத்திபட்டியில் ஸ்ரீபுதுமாரியம்மன் திருவிழாவும்,சின்னக்கட்டளையில் ஸ்ரீசொர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இத்திருவிழா ஏழுநாட்கள் நடைபெற்றது.முதல்நாள் கொடியேற்றத்துடன் துவங்கியத்திருவிழா பலகலைநிகழ்ச்சியுடன் முளைப்பாரி,தீக்குழி,தீச்சட்டி,கரும்புக்கட்டில் குழந்தைக்கு தொட்டில்கட்டுதல்,உடம்பில் அழகுகுத்தி தேர்இழுத்தல்,உருண்டு கொடுத்தல்,உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்களுடன் திருவிழா நடைபெற்றது.இத்திருவிழா பலகிராமங்களிலிருந்து பல ஆயிரம்மக்கள் வந்து தரிசனம் பெற்று சென்றவண்ணம் இருந்தனர்.விழாவிற்கு சிறப்புபேரூந்துகள் நிறைய இயக்கப்பட்டது.கூட்ட நெறிசல்களை சமாளிக்க காவல்துறையினர் வாகனங்களை வெளிப்புறங்களிலேயே நிறுத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.இவ்விழா இப்பகுதியிலேயே மிகவும் பிரசக்திப்பெற்றதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்