முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பித்துபிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு!

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

பாகிஸ்தான், மே, - 1 - இங்கிலாந்தில் நடைபெறும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியிலிருந்து ஆல் ரவுண்டரும் அதிரடி வீரருமான ஷாகித் அடிப்ரீடி, மற்றும் நல்ல பேட்ஸ்மென் உமர் அக்மல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓரளவுக்கு சிறப்பாகவே கேப்டனாக செயல்பட்ட மொகமது ஹபீஸுக்கு பதிலாக அறுவை பேட்ஸ்மெனான, டிபீல்டிங்கில் கேட்ச்களையும் பந்துகளையும் கோட்டைவிடும் மிஸ்பா உல் ஹக்கை கேப்டனாக நியமித்துள்ளனர். அப்ரீடி இப்போதுதான் தென் ஆப்பிரிக்காவில் ஒரு அச்சமூட்டும் இன்னிங்ஸை விளையாடினார். ஓரளவுக்கு சிக்கனமாகவே வீசுகிறார். அப்ரீடி போன்ற வீரர்கள் ஒரு எக்ஸ் டிபேக்டர் என்று கூற்வார்களே அது போன்று. ஒரு கிரேட் மேட்சை ஒன்றுமில்லாமல் அனாயசமாக வெற்றிபெற்றுத் தரக்கூடிய அபூர்வத் திறமை படைத்தவர். அதே போல் உமர் அக்மல் பாகிஸ்தான் பேட்டிங் லைன் அப்-இல் டெக்னிக்குடன் ஆடக்கூடிய ஒரே வீரர். அவரையும் நீக்கியுள்ளது பித்து பிடித்த பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு. தலைமை தேர்வாளர் இக்பால் காசிம், அப்ரீடியை ஏன் நீக்கினீர்கள் என்றால், ாஅப்ரீடி பந்து வீச்சு சமீபமாக நன்றாக இல்லை. விக்கெட்டுகளை வீழ்த்துவதில்லை. அணியில் அவர் ஒரு பவுலராகவே இருக்கிறார்ா என்கிறார். இது போன்று பேசுவதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரரால் மட்டுமே முடியும். அடிப்ரீடி ஆல் ரவுண்டர் என்று உலகமே கூற இக்பால் காசிமுக்கு மட்டும் அவர் பந்து வீச்சாளராக் மட்டுமே தெரிகிறார். தட்டுத் தடவி வரும் ஷோயப் மாலிக், இங்கிலாந்தில் சூதாட்ட பேரத்தில் இறங்கியதாக சந்தேகிக்கப்பட்ட, கேட்ச்களை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டுள்ளனர். அதுவும் கடுமையான எச்சரிக்கையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனராம்! அதாவது சாம்பியன்ஸ் டிராபிதான் அவர்கள் கடைசி போட்டி என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்களாம். ஏண்டா! அப்ரீடி, உமர் அக்மலை நீக்கிவிட்டு யாராவது தேவையற்ற ஷோயப் மாலிக்கையும், கம்ரன் அக்மலையும் தேர்வு செய்வார்களா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்