முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரஜோதி மனிதர்களால் ஏற்ப்படுத்துவது தான் - திருவாங்கூர் தேவசம்போர்டு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.29 - சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்று கேரள மாநில ஐகோர்ட்டில் திருவாங்கூர் தேவசம்போர்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு ஜனவரி 14 ம் தேதி ஜோதி தரிசனத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 102 பேர் இறந்தனர். இச்சம்பவத்தையடுத்து பொன்னம்பல மேட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ம் தேதி காணப்படும் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது. ஆனால் அது ஐயப்பன் அருளால் ஏற்படும் அற்புதம் என கோயில் நிர்வாகம் பிரச்சாரம் செய்து பக்தர்களை ஏமாற்றி வருகிறது. கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளத்தை சேர்ந்த யுக்தி வேதிசங்கம் உட்பட 3 அமைப்புகள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. 

இதற்கு பதில் மனுவை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு சார்பில் அதன் செயலர் பி.ஆர். அனிதா தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, 

மகரஜோதி தொடர்பாக தேவசம்போர்டு பிரச்சாரம் செய்து வருவதாக கூறியிருப்பது சரியல்ல. அது போல எந்த சமயத்திலும் கோயில் நிர்வாகம் பிரச்சாரம் செய்யவில்லை. தேவசம்போர்டு அமைக்கப்படுவதற்கு முன்பே பொன்னம்பல மேட்டில் ஜோதி ஏற்றப்பட்டு வருகிறது. அங்கு வசித்து வந்த பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் மகர விளக்கு நாளில் பொன்னம்பல மேட்டில் ஜோதி ஏற்றி வருகிறார்கள். அந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் அவர்களது வாரிசுகள் குறிப்பிட்ட நாளில் அங்கு சென்று மகர ஜோதி ஏற்றி வருகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்