முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேர்டெவிஸ்ல்ஸ் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 2 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராய்பூர், மே. 3 - ஐ.பி.எல். - 6 போட்டியில் ராய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித் தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர் ஸ் அணியை தோற்கடித்தது. டெல்லி அணி தரப்பில் டேவிட் வார்னர் அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பா தைக்கு அழைத்துச் சென்றார். அவருக் கு பக்கபலமாக, உக்கம்சந்த் மற்றும் சேவாக் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, டெ ல்லி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி கொ ல்கத்தா அணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். முக்கியமாக உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசினார். அவ ருக்கு ஆதரவாக இர்பான் பதான், நெ க்ரா, மார்கெல் மற்றும் நதீம் ஆகியோ ர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் 44 - வது லீக் ஆட்டம் ராய்பூரில் உள்ள சகீத் வீர் நா ராயண் சிங் சர்வதேச அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி டெல்லியி ன் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி நிர் ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 136 ரன்னை எடுத்தது. 

கொல்கத்தா அணி தரப்பில், ஆர். பாட்டியா அதிகபட்சமாக 26 பந்தில் 26 ரன்  எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்கா மல் இருந்தார். இதில் 2 பவுண்டரி அட க்கம். தவிர, நர்வால் 15 பந்தில் 23 ரன் னையும், யூசுப் பதான் 20 ரன்னையும், பிரட்லீ 16 ரன்னையும், டி.பி. தாஸ் 18 ரன்னையும், காலிஸ் 12 ரன்னையும், மார்கன் 10 ரன்னையும் எடுத்தனர். 

டெல்லி அணி தரப்பில் உமேஷ் யாதவ் 36 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, இர்பான் பதான், நெக்ரா, மார்கெல் மற்றும் நதீம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

டெல்லி அணி 137 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொ ல்கத்தா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்னை எடுத் தது. 

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் டெல் லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத ன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடை த்தது. 

இந்த வெற்றி டெல்லி அணிக்கு மொ த்தத்தில் 3-வது வெற்றியாகும். தொடர்ந்து அடுத்தடுத்து 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று உள்ளது. 

டெல்லி அணி தரப்பில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக, 42 பந்தில் 66 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 6 பவுண்டரி மற்று ம் 3 சிக்சர் அடக்கம். தவிர, இளம் வீர ரான உக்கம் சந்த் 39 பந்தில் 37 ரன்னைஎடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, சேவாக் 17 ரன்னையும், ரோகெர் 10 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில் பிரட்லீ 26 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட்எடுத் தார். தவிர, பாலாஜி மற்றும் காலிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்