இந்திய தூதரை உடனே திரும்ப அழைக்க வேண்டும்: பா.ஜ.க.

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 4 - பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கான இந்திய தூதரை உடனே திரும்ப அழைத்து தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வகையில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டின் தூதரை திரும்ப அழைக்க வேண்டும். அந்த நாட்டுடனான அனைத்து தூதரக உறவை முறிக்க வேண்டும். நாட்டின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மங்கச்செய்கிறது. சரப்ஜித்சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகையும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: