சரப்ஜித்சிங் உடலை கொண்டு வந்து விட்டோம்: திக்விஜய்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 4 - இந்திய நாட்டின் குடிமகன் ஒருவர் அண்டை நாட்டு சிறையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதற்கு கடுமையாக கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்ததே வெற்றி என்று குதூகலிக்கிற கொடுமை நடந்தேறி இருக்கிறது. 

எல்லையில் சீனாவின் ஊடுருவல், பாகிஸ்தானில் சரப்ஜித்சிங் படுகொலை என இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரப்ஜித் சிங் கொலைக்கு எதற்காக நடந்தது? கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த ஒரு உண்மையும் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் சரப்ஜித்சிங் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்ததே மிகப் பெரிய வெற்றியாக கருதுகிறது காங்கிரஸ். அக் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் இப்படித்தான் கொண்டாடி இருக்கிறார் சரப்ஜித் சிங் உடலை முன் வைத்து சரப்ஜித் சிங் உடலை வெற்றிகரமாக கொண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார். 

இதனிடையே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றன வீனா மாலிக் உள்ளிட்ட அனைத்து பாகிஸ்தானிய நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: