முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்கஅரசு எதிர்ப்பு

சனிக்கிழமை, 4 மே 2013      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா, மே. - 5 - சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது எனமேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தின் விவரம்: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை மாநில போலீசார் நேர்மையாக விசாரித்து வருகின்றனர். மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் தலைவர் கதிப்தோ சென் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீசாரின் விசாரணையில் இதுவரை எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. இது போன்று  மேலும் பல நிதி நிறுவனங்கள்  கவர்ச்சிகரமான  திட்டங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றையும்  தீவிரமாகக் கண்காணித்து  வருகிறோம். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சியாமள்  குமார் சென் தலைமையில் நான்கு  நபர்  விசாரணைக் குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது. இது போன்ற  சூழ்நிலையில்   இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்  மாநில போலீசாரின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி  விடும்.  எனவே சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிடக்கூடாது  என அந்த பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இதற்கிடையில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐக்கு  மாற்ற வேண்டும் எனக் கோரி  நான்கு  பொது நல மனுக்கள் கொல்கத்தா  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி  அருண் மிஸ்ரா, ஜோமால்யோ பாகி ஆகியோரங்கிய அமர்வு,  அந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  எடுத்துக் கொண்டு  ஆய்வு செய்தது  அதையடுத்து  அந்த மனுக்களின் மீதான  அடுத்த கட்ட  விசாரணையை  மே 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்